அழகான ஆன்டீஸ்க்காக படம் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்


அழகான ஆன்டீஸ்க்காக படம் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என தொடர் வெற்றிப் படங்களையடுத்து அடுத்து ‘இறைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன், கமாலினி முகர்ஜி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது… “குடும்ப உறவுகள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் ஆன்டீஸ் பற்றிய கதை வந்தது இல்லை. இது நம்முடன் வாழும் நம் உறவினர்கள் சித்திகள் மற்றும் அத்தைகள் பற்றிய கதை. இன்றை காலகட்டத்திற்கு ஏற்ப சொல்லியிருக்கிறேன். இது ஒரு பக்கா குடும்பக்கதை.

என்னுடைய படங்கள் ஒரே இலக்கில் பயணிக்க ஆசைப்படுவதில்லை. ஆனால் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபம் பெற வேண்டும் என பயணிக்க நினைக்கிறேன்” என்றார்.