சூர்யாவுடன் கை கோர்க்கும் விஜய்சேதுபதி… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!


சூர்யாவுடன் கை கோர்க்கும் விஜய்சேதுபதி… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’24’ . இப்படம் நாளை மறுநாள் மே 6 ம் தேதி உலகமெங்கும் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள இறைவி படத்தின் ட்ரைலரை திரையிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளாராம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இறைவி படத்தில் மூன்று நாயகர்கள் இணைந்துள்ளதால், இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை ‘இறைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.