நயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..!


நயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..!

மிகவும் வித்தியாசமான இரண்டு வேடங்களை ஏற்று விக்ரம் நடித்து வரும் படம் இருமுகன். ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதுநாள் வரை இப்படத்திற்காக கருகருவென நீண்டு வளர்ந்த தாடியுடன் காணப்பட்ட விக்ரம் சமீபகாலமாக முழுவதும் சேவிங் செய்த முகத்துடன் வலம் வருகிறார்.

அதற்கு காரணம், இவர் இப்படத்தில் ஏற்கவுள்ள மற்றொரு கேரக்டரான திருநங்கை கேரக்டர்தான். இதில் ஒரு மாறுபட்ட மேனரிஸத்தை தன் நடிப்பில் கொண்டு வரவிருக்கிறாராம் விக்ரம்.

சென்னை, மலேசியாவில் நடைப்பெற்ற இதன் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீர் மற்றும் பாங்காங்கில் நடைபெறவுள்ளது.

இப்படத்தை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாராவின் மாயா, ஜி.வி. பிரகாஷின் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களும் கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி (செப், 17) அன்றுதான் வெளியானது. இவை இரண்டும் மாபெரும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.