‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..!


‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..!

ஆனந்த் ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இவருடன் நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா, யூகி சேது, ரித்விகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் திரு இயக்கும் கருடா படத்தின் படப்பில் ஜுலை முதல் கலந்துகொள்ளவிருக்கிறாராம் விக்ரம்.

இதில் முதன்முறையாக விக்ரமுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார்.