மாதவனின் ‘இறுதிச்சுற்று’… சூர்யாவின் ‘24’… இப்படி ஒரு ஒற்றுமையா..?


மாதவனின் ‘இறுதிச்சுற்று’… சூர்யாவின் ‘24’… இப்படி ஒரு ஒற்றுமையா..?

சூர்யா மற்றும் மாதவன் ஆகிய இருவரும் ஆயுத எழுத்து படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாவைத் தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நட்புடன் பழகி வருகின்றனர்.

இறுதிச்சுற்று படத்தை மாதவன் தயாரித்து நடித்திருந்தார். அதுபோல் 24 படத்தை சூர்யா தயாரித்து நடித்திருக்கிறார். மேலும் இந்த இரு படங்களுக்கும் மற்றொரு ஒற்றுமை உள்ளது.
கடந்த ஜனவரி மாத இறுதியில் மாதவன் தயாரித்து நடித்த இறுதிச்சுற்று, தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது.

இப்படம் வெளியாகும் முன்னரே மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டதால், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்தனர்.

தெலுங்கிலும் சுதா இயக்க, வெங்கடேஷ் நடிக்கிறார். சசிகாந்த் தயாரிக்கிறார்.

இந்நிலையில் சூர்யா தயாரித்து நடித்துள்ள 24 படமும் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மே 6ஆம் தேதி வெளியாகிறது.

தற்போது ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமை பேசப்பட்டு வருகிறதாம்.

சூர்யா வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க, ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கவிருக்கிறாராம்.