மாதவன் இல்லை.. ரிலீசுக்கு முன்பே தெலுங்கு ரீமேக் கன்பார்ம்..!


மாதவன் இல்லை.. ரிலீசுக்கு முன்பே தெலுங்கு ரீமேக் கன்பார்ம்..!

மாதவன் தயாரித்து நடித்துள்ள ‘இறுதிச்சுற்றுபடத்தை சுதா இயக்கியுள்ளார். இதில் மாதவனுடன் நிஜ குத்துச் சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தமிழில் தயாரித்துள்ளனர்.

இப்படம் இன்று தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகிறது. இந்தியில் ‘சாலா காதூஸ்(Saala Khadoos)’ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக்  செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தெலுங்கிலும் இதே இயக்குனர் சுதாஇயக்கவிருக்கிறாராம். ஆனால் மாதவன் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்சசிகாந்த் தயாரிக்கவிருக்கிறார்.

பொதுவாக படம் வெளியாகி வெற்றிப் பெற்றால் மட்டுமே ரீமேக் செய்யப்படும் நிலையில் ரிலீஸிற்கு முன்பே இப்படம் ரீமேக் உறுதியானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.