இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்… கதையை மாற்றும் வெங்கடேஷ்..!


இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்… கதையை மாற்றும் வெங்கடேஷ்..!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற படம் இறுதிச்சுற்று.

இப்படம் வெளியாகும் முன்னரே இதன் தெலுங்கு ரீமேக்கில் நானே நடிக்கத் தயார் என முன்வந்தார் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.

எனவே இப்படத்தை தெலுங்கிலும் இயக்க சுதா கொங்கரா ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், இப்படத்தின் கதையை மாற்றச் சொன்னாராம் நாயகன் வெங்கடேஷ்.

இதன் ஒரிஜினல் படத்தில், மாதவனின் மனைவி யாரோ ஒருவருடன் ஓடிவிடுவார். மேலும் மாதவனை ஒரு பொம்பள பொறுக்கியாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனால் இதே வேடத்தில் தான் நடித்தால் தன்னுடை இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால், கதையை மாற்றச் சொல்லி விட்டாராம் வெங்கடேஷ்.

சுதாவும், சரி பார்க்கலாம் எனறு கூறியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.