‘பரதேசி’ அதர்வாவுடன் ஜனனி ஐயர் காதலா?


‘பரதேசி’ அதர்வாவுடன் ஜனனி ஐயர் காதலா?

‘பானா  காத்தாடி’ என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதர்வா. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’, ‘இரும்புக்குதிரை’ போன்ற படங்கள் வெளிவந்தன. இதில் பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டது.

தற்போது, ரவி அரசு இயக்கத்தில் ‘ஈட்டி’, டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் ‘கணிதன்’, சற்குணம் இயக்கத்தில் ‘சண்டி வீரன்’ ஆகிய படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் அதர்வா. இதனை தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் அதர்வா ‘அவன் இவன்’, ‘தெகிடி’ படங்களில் நடித்த ஜனனி ஐயருடன் மிக நெருக்கமாக பழகி வருவதாகவும் மேலும் இருவரும் தனிமையில் சந்தித்து கொள்வதாகவும் செய்திகளை வந்ததையடுத்து அதர்வாவை தொடர்பு கொண்டோம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது… “காதலிப்பதற்கான காலம் எனக்கு வரவில்லை. எனக்கு ரொமான்ஸ் செய்வதற்கு நேரமும் இல்லை. இதுபோன்ற உறவுகளில் தற்போது மாட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை” என்றார்.