சூப்பர் ஸ்டார்கள் என்ன ஜோக்கர்களா..? சிம்புக்கு விஷால் கேள்வி..!


சூப்பர் ஸ்டார்கள் என்ன ஜோக்கர்களா..? சிம்புக்கு விஷால் கேள்வி..!

நடிகர் சங்க வங்கிக் கணக்கில் ரூ.8 கோடி இருப்பதால் தான் மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டார் விஷால்.

இதனைத் தொடர்ந்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது..

“ரூ.100 கோடி சொத்துக்கான பத்திரம் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தற்போது கைக்கு வந்துவிட்டது. இதை நான் நடிகர் சங்க வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்.

தற்போது வங்கியில் 8 கோடி இருப்பதால், அதில் வரும் வட்டியை வைத்தே மருத்துவ உதவி, படிப்பு உதவி ஆகிய உதவிகளை செய்ய முடியும்.

நானும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறோம். இயக்குனர் தேர்வு நடந்து வருகிறது. அப்படத்தின் மூலம் வரும் பணத்தை வைத்து கட்டிட பணிகளை தொடங்குவோம்.

சிம்பு பற்றி கேட்டதற்கு அவர் கூறியது…

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது அவரது தனிப்பட்ட கருத்து. பீப் பாடல் பிரச்சினை வந்தபோது நானே சிம்புவிடம் பேசினேன். அவர்தான் சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

ஆனால் அவர் நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடியவர்களை ஜோக்கர்ஸ் என்று சொல்லிவிட்டார்.

அனைத்து மாநில சூப்பர் ஸ்டார்களும் வந்து தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். இதில் யார் ஜோக்கர்களாக அவருக்கு தெரிந்தோம் என தெரியவில்லை” என்றார்.