ஆர்யா-நயன்தாரா மோதலாமே? என்னதான் ஆச்சு?


ஆர்யா-நயன்தாரா மோதலாமே? என்னதான் ஆச்சு?

யார் கண் பட்டுச்சோ தெரியல? பாவங்க அந்த புள்ள… அட ஆர்யாவத்தான் சொல்றோம். உடன் நடிக்கும் எல்லாம் நடிகைகளையும் பிரியாணி கொடுத்து கரெக்ட் செய்வார். மன்னிக்கவும்… பிரியாணி விருந்து கொடுத்து நன்றாக கவனிப்பார்.

ஆனால் தற்போது அவருடன் மிக நெருக்கமாக இருந்த நயன்தாராவுடனான நட்பில் சிறிய விரிசல் விழுந்து விட்டதாக தெரிகிறது. வருகிற செய்திகளும் அந்த விரிசலை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. தற்போதுதான் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என எடுத்து வரும் சீசன் ஆயிற்றே.

எனவே ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறார்களாம். ஆர்யாவின் சம்மதத்தின் பேரில்தான் இப்படி ஒரு முயற்சியே ஆரம்பம் ஆனதாம். உடனே இதனை அறிந்த சந்தானமும் ஓகே சொல்ல, வந்தது பிரச்சினை நயன்தாராவிடம் இருந்துதான்.  ஸாரி. எனக்கு ஆர்யாவுடன் நடிக்க விருப்பமில்லை என்று ஒரே போடாக போடுவிட்டார் நயன்தாரா.  தயாரிப்பு தரப்பில் எவ்வளவோ பேசி பார்த்தும் மசியவில்லையாம் இந்த மலையாளத்து மங்கை.