‘கெத்து’ தமிழ் சொல் இல்லை… அரசு வக்கீல் அளித்த விளக்கம்..!


‘கெத்து’ தமிழ் சொல் இல்லை… அரசு வக்கீல் அளித்த விளக்கம்..!

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ‘கெத்து’. இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்தது. ஆனால் ‘கெத்து’ என்பது தமிழ் சொல் அல்ல என்று கூறி இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்தது.

இதனால் உதயநிதி வழக்கு தொடுக்க இவ்வழக்கு மீண்டும் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கில், ‘கெத்து’ என்கிற வார்த்தையை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கே என்கிற எழுத்துக்கு பதிலாக ஜி (GETHU) என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரும், கெத்து என்பது தமிழ் சொல் அல்ல என்று தெரிவித்தார். எனவே, இவ்வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது.