பிரகாஷ்ராஜுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை..!


பிரகாஷ்ராஜுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை..!

கன்னடத்தில் அரை டஜன் படங்களில் நடித்து முடித்த பிரகாஷ்ராஜை தன் ‘டூயட்’ மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர்.

அதன்பின்னர் மலையாளம், தெலுங்கு, இந்தி என தன் சினிமா மீதான காதலை இந்தியா முழுக்க பரவச் செய்தார் பிரகாஷ்ராஜ்.

இதனிடையில் 1994ம் ஆண்டு நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் பிரபல நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியருக்கு மேகனா, பூஜா என இரண்டு மகள்கள் உண்டு.

அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்து, பாலிவுட் நடன இயக்குனர் போனி வெர்மாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Related