பெரிய ஸ்டார்களை நெருங்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்


பெரிய ஸ்டார்களை நெருங்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்

சினிமா உலகில் எண்ணற்ற ஹீரோக்கள் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களின் படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் நிலவரம் எப்படி என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

கதாநாயகர்களை நம்பாமல் கதையை மட்டும் நம்பி எத்தனேயோ படங்கள் வாரா வாரம் ஆரவாரமில்லாமல் வெளியாகிறது. சில படங்கள் தோல்வி அடைந்தாலும் சில படங்கள் பெரும்பான்மையான ஆதரவை பெற்று வெற்றி பெறுகிறது. இருந்தபோதிலும் வெறும் விமர்சனங்களோடு அவை காலப்போக்கில் காணாமல் போகிறது.

இந்நிலையில், அண்மையில் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தீபக், நேகா, சென்ட்ராயன், குமரவேல், நான்கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்த இப்படத்தை எஸ்.என்.சக்திவேல் இயக்கியிருந்தார்.

அதிலும் ‘மொட்டை’ ராஜேந்திரன் இப்படத்தில் பின்னி பெடலெடுத்திருந்தார். இவரது நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தால் படமும் ‘பிக்அப்’ ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 100க்கும் மேற்பட்ட திரையங்களில் இப்படம் அதிகமாக திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வார சென்னை வசூல் மட்டும் ரூ. 34 லட்சத்தை எட்டியுள்ளதாம். மொத்தம் ரூ. 50 லட்சம் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாம். இப்படத்தின் சென்னை வசூல்  வெறும் ரூ. 30 லட்சம் மட்டும்தானாம்.