ஜாக்கிசான் கொடுத்த ஜாக்கெட்…. பாதுகாக்கும் தனுஷ் பட நாயகி..!


ஜாக்கிசான் கொடுத்த ஜாக்கெட்…. பாதுகாக்கும் தனுஷ் பட நாயகி..!

நமக்கு பிடித்தமான ஒருவர், பரிசு கொடுத்தால் அதை நிச்சயமாக பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருப்போம். ஆசியா கண்டத்தின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் கொடுத்தால் சும்மா விட்டுவிடுவோமா என்ன?

அப்படிதான் ஜாக்கிசான் கொடுத்த ஜாக்கெட் ஒன்றை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம் அமைரா. இவர் தனுஷ் உடன் பலவிதமான கெட்டப்புகளில் அனேகன் படத்தில் கலக்கியவர்.

பிரபல இந்தி நடிகையான இவர் தற்போது ஜாக்கி சானுடன் நடித்து வருகிறார். இந்தியா மற்றும் சீனாவின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு குங்பூ-யோகா என்று பெயரிட்டுள்ளனர்.

சீன இயக்குனர் ஸடேன்லி டோங் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடும் பனி பிரதேசமான ஐஸ்லாந்தில் தற்போது நடந்து வருகிறது.

இதில் நடிக்கும்போது கடும் பனியையும் பாராமல் தன்னுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட அமைரா அர்ப்பணிப்பை பார்த்த ஜாக்கி சான், தானே வடிவமைத்த, குளிர்காலத்தில் அணிய கூடிய ஜாக்கெட் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதைதான் பொக்கிஷமாக வைத்திருக்கிறாராம் அமைரா.