மெட்ராஸ் ரவுடியுடன் மோதும் விஜய்-விஷால்..!


மெட்ராஸ் ரவுடியுடன் மோதும் விஜய்-விஷால்..!

பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

வில்லன்களாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படம் குறித்து ஜெகபதிபாபு பேசும்போது…

“இந்தப் படத்தில் எனக்கொரு வித்தியாசமான வேடத்தை கொடுத்துள்ளார் பரதன்.

நான் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தேன். அப்போது அங்கிருந்த நண்பர்கள் மெட்ராஸ் ரவுடி என்றுதான் கூப்பிடுவார்கள்” என்றார்.

இவர் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள கத்தி சண்டை படத்திலும் நடிக்க கமிட்டாகி இருப்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.