ரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..!


ரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..!

‘தெறி’ படத்தை தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ இயக்குனர் பரதன் இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

இப்படத்தில் விஜய்யுடன் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபகாலமாக வில்லன் மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.