‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…!


‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…!

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் தளபதி 60 படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வில்லன்களாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கதையை திருநெல்வேலியில் உள்ள கிராமத்து பின்னணியை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இதில் ஜெகபதிபாபு கசாப்பு கடை வைத்திருப்பவராக நடிக்கிறாராம்.

பின்னர் தில்லு முல்லுகளை செய்து, அவரே கல்வி அமைச்சராக உருவெடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.