தல’ படத்தை வாங்கிய ஜெயா தோழி சசிகலா!


தல’ படத்தை வாங்கிய ஜெயா தோழி சசிகலா!

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இதில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், ராகுல் தேவ், கபீர் சிங்,தம்பி ராமையா, அஸ்வின், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பணியாற்றியுள்ள சிவா மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது. எனவே தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிடவுள்ளனர். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்துள்ள இப்படத்திற்கு ‘ஆவேசம்’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் தமிழக உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் உரிமையை வாங்கியவர்கள் ஜாஸ் சினிமா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வெளியிட்டுக் கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்நிறுவனமானது சமீபத்தில் ரூ. 1000 கோடிக்கு சத்யம் சினிமாஸிடமிருந்து லக்ஸ் மல்டிப்ளெக்ஸை வாங்கியது. தற்போது திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ‘வேதாளம்’ படத்தின் தொலைக்காட்சிய உரிமையை ஜெயா டிவி வாங்கி இருப்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.