மீண்டும் மீண்டும் அஜித் படங்களை வாங்கும் ஜெயா டிவி!


மீண்டும் மீண்டும் அஜித் படங்களை வாங்கும் ஜெயா டிவி!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘வேதாளம்’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் காலில் காயம் ஏற்பட்டதையடுத்து தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தபோதிலும் வலியை பொருட்படுத்தாமல் டப்பிங் பேசவிருக்கிறார் அஜித் என கூறப்படுகிறது. இப்படத்தை தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவ. 5ஆம் தேதி வெளியிடவுள்ளனர். ஒரு பக்கம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் கூறிவருகிறார்.

இதனிடையில் தமிழகத்தில் மட்டும் ரூ.40 கோடி வியாபாரத்தை தாண்டியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி மாபெரும் தொகையைக் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பே ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமையையும் ஜெயா டிவி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.