ரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..!


ரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..!

சினிமாவில் ஹீரோ என்றால் நல்லது செய்வது, நல்லதையே பேசுவது இப்படியாக இருந்த காலகட்டத்தில் நெகட்டிவ்வான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து ஹீரோவாக ஜெயித்தவர் ரஜினிகாந்த்.

சமீபத்தில் வில்லன், மங்காத்தா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ்வான ரோல்களில் நடித்து அஜித்தும் அதில் ஜெயித்து காண்பித்தார்.

இதுநாள் வரை தனி ஒருவனாக (ஹீரோவாக) வலம் வந்த ஜெயம் ரவி, தற்போது நெகட்டிவ் ரோல்கள் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

ரோமியோ ஜூலியட் படத்தை தொடர்ந்து லட்சுமண் இயக்கவுள்ள போகன் படத்தில்தான் இந்த மாற்றம். இதில் ஜெயம் ரவியின் தந்தையாக அரவிந்த்சாமி நடிக்கிறாராம்.

இப்படத்தின் கதைப்படி முதல் பாதியில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி வில்லனாகவும், அர்விந்த் சாமி ஹீரோவாக நடிக்கிறாராம்.

பல வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் ரங்கா படமும் இதுபோன்ற கதைதான் என்பது தாங்கள் அறிந்ததே.