காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..!


காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..!

கடந்த ஆண்டில் பாகுபலி அலையில் பல படங்கள் தொலைந்து போன நிலையில், தனி ஒருவன் படம் எதிர்த்து நின்றது.

மோகன் ராஜா இயக்கிய இப்படத்தில் போலீஸ் ஜெயம் ரவிக்கு வில்லனாக அர்விந்த் சாமி நடித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இவர்கள் நடித்து வரும் போகன் படத்தில் இருவரும் போலீஸ் உடையில் தோன்றியுள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் கூறியதாவது…

“இதில் ஜெயம்ரவி போலீஸ் ஆக நடிக்கிறார். அர்விந்த் சாமி ஒரு பணக்கார வாரிசாக நடிக்கிறார்.

ஆனால் இவரது காக்கி சட்டை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியை ஜெயிலில் படமாக்கினோம்.” என்றார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. விரைவில் இரண்டு பாடல்காட்சிகளுக்காக பிரான்ஸ் செல்லவிருக்கிறது போகன் படக்குழு.