முதன்முறையாக விஜய்யுடன் ஜெயம் ரவி… வரவேற்கும் ரசிகர்கள்.!


முதன்முறையாக விஜய்யுடன் ஜெயம் ரவி… வரவேற்கும் ரசிகர்கள்.!

மிருதன் வெற்றிப் படத்தை தொடர்ந்து, போகன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
பிரபு தேவா தயாரிக்கும் இப்படத்தை லக்ஷ்மன் இயக்கி வருகிறார்.

இதில் ஹன்சிகா, அர்விந்த்சாமி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.

அதில், “இயக்குனர் விஜய்யின் பாணியிலான படங்கள் எனக்கு பொருத்தமாக இருக்கும். எனவே அவருடன் இணைந்து பணிபுரிய ஆசை இருந்தது.

தற்போது அது அமைந்துள்ளது. எங்களது கூட்டணி வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறும் என இருவரும் உறுதியாக நம்புகிறோம்”’ என்றார்.

இந்த புதிய கூட்டணியை வரவேற்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.