சக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி-லக்ஷ்மிமேனன் ஜோடி!


சக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி-லக்ஷ்மிமேனன் ஜோடி!

‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து ‘பூலோகம்’, ‘அப்பாடக்கரு’, ‘தனி ஒருவன்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். நான்கு படங்களின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருந்தாலும் இதில் ‘ரோமியோ ஜூலியட்’  படம் முந்தி கொண்டது.

வருகிற மே மாதம் 15ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம்பஜ்வா மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் சத்யராஜ் தயாரிக்க சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை சக்திராஜன் இயக்கியிருந்தார். இயக்குனருக்கும் நடிகர் சிபிராஜிக்கும் மற்றும் முக்கிய கதாபாத்திரமான அந்த நாய்க்கும் நல்ல பெயரை அப்படம் பெற்றுத் தந்தது.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கும் படத்தை சக்திராஜன் இயக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்போடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.