ஜெயம் ரவி, லட்சுமி மேனன் இணையும் ‘மிருதன்’


ஜெயம் ரவி, லட்சுமி மேனன் இணையும் ‘மிருதன்’

‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா கேரியர் பெரியளவில் உயர்ந்துள்ளது. எனவே இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்திராஜன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதுவரை பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்போது ‘மிருதன்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்காக முதன்முறையாக லக்ஷ்மிமேனனுடன் இணைந்துள்ளார்.

இவர்களுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நாடோடிகள்’ வெற்றிப் படத்தை தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் முதற் கட்டப்படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.