ஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்டி.?


ஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்டி.?

இவ்வருடம் தொடங்கி மூன்று மாதங்கள் முடிவடைவதற்குள் விஜய் சேதுபதியின் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும் படங்கள் வெளியாகிவிட்டன.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தர்ம துரை, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

மேலும் டி.ராஜேந்தருடன் இணைந்து கே.வி. ஆனந்த் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தனுஷின் வடசென்னை படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவரைப் போல் ஜெயம் ரவியும் தனது அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

தற்போது அர்விந்த் சாமியுடன் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார் ரவி. இதன்பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கத்திலும், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதனையடுத்து நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.