மூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..!


மூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..!

‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லட்சுமணன், ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா ஜோடி இணைகின்றனர். ‘போகன்’ என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் அர்விந்த் சாமியும் நடிக்கிறார்.

இப்படத்தின் போட்டோ ஷுட் வருகிற மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 18ல் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர்.

இதன் பின்னர் புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை நடிகர் பிரபுதேவா தயாரிக்கிறார். இவர் இப்படத்தில் ஒரு கேரக்டரில் தோன்றக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘தனி ஒருவன்’, ‘மிருதன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இதிலும் ஜெயம் ரவி, காக்கி சட்டை அணியவிருக்கிறாராம்.