மீண்டும் களைகட்டும் ஜெயம் ரவி -அரவிந்த்சாமி வெற்றிக் கூட்டணி!


மீண்டும் களைகட்டும் ஜெயம் ரவி -அரவிந்த்சாமி வெற்றிக் கூட்டணி!

‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி காட்டுல செம மழை…

அதற்காக மனிதர் உச்சி குளிர்ந்திடவில்லை. வழுக்கிவிடாமல் நிதானமாகத் தன்னுடைய ஸ்டெப்புகளை எடுத்து வைக்கிறார். இப்போ ‘மிருதன்’ படத்திற்காக லட்சுமி மேனனுடன் டூயட் பாடி வருகிறார் இவர்.

இந்த படத்திற்கு பிறகு ‘ரோமியோ ஜூலியட்’ பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கிறார் ஜெயம் ரவி. இதுபற்றி அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வந்தது . இப்படத்தை லஷ்மண் இயக்க பிரபு தேவா தயாரிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவை கவனிக்க இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் மீண்டும் அர்விந்த்சாமி இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

முன்பு அரவிந்த்சாமி வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.