ஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணையும் ‘போகன்’ ரஜினி பட காப்பியா…?


ஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணையும் ‘போகன்’ ரஜினி பட காப்பியா…?

தனி ஒருவன் படத்தில் கலக்கிய ஜெயம்ரவியும், அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கும் படம் போகன். இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். லக்ஷ்மண் இயக்கும் இப்படத்தை பிரபுதேவா தயாரிக்கிறார்.

இதில் யார் ஹீரோ? யார் வில்லன் என்று தெரியாத அளவிற்கு காட்சிகள் அமைத்து இருக்கிறார்களாம். அதாவது ஜெயம் ரவி நாயகனாக இருக்கும்போது அர்விந்த் சாமி வில்லாக இருப்பாராம். அவர் ஹீரோவாக இருக்கும்போது இவர் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படம் கிட்டதட்ட ரஜினி நடித்த, சூப்பர் ஹிட்டடித்த ரங்கா படத்தின் காப்பியா இருக்கும் என்றே தெரிகிறது. காரணம் அப்படத்தில் முதலில் ரஜினி நல்லவனாக இருப்பார், திருடனாக கராத்தே மணி இருப்பார்.

இருவரும் ஒரு முறை சந்தித்தபின், திருடுவது தப்பு என்று ரஜினி அட்வைஸ் செய்வார்.

ஆனால் மணியோ, திருடினால்தான் வசதியாக வாழலாம். உழைத்து முன்னேற முடியாது என்பார்.

அதன்பின்னர் ரஜினி திருடனாகவும், மணி நல்லவனாக மாறி விடுவார்.

இதுபோல்தான் போகன் படத்தில் இரண்டு நாயகர்களும் மாறி மாறி நடித்திருக்கிறார்களாம்.