விஜய் படத்தில் நடிக்க மறுத்தாரா ஜெயம் ரவி?


விஜய் படத்தில் நடிக்க மறுத்தாரா ஜெயம் ரவி?

‘ரோமியோ ஜுலியட்’, ‘அப்பாடக்கர் சகலகலா வல்லவன்’ ஆகிய படங்களை தனி ஒருவன் படத்தில் நடித்தார் ஜெயம் ரவி. இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய இப்படம் இருவரது சினிமா கேரியரிலும் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. இதனால் இவர்களின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது மோகன் ராஜா இதன் ரீமேக்கை மற்ற மொழிகளில் இயக்க தயாராகிவருகிறார்.

இந்நிலையில் “நாய்கள் ஜாக்கிரதை“ படத்தை இயக்கிய சக்திராஜன் இயக்கும் ‘மிருதன்’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவருக்கு ஜோடியாக லெஷ்மி மேனன் நடிக்க, பேபி அனிகா, காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரபுதேவா தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவற்றையெல்லாம் முடித்துவிட்டு, “தலைவா“, “இது என்ன மாயம்“ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் படத்தில் நடிப்பார் ஜெயம் ரவி என கூறப்பட்டது. இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது “புதிய படங்களை எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. புதிய படத்தில் ஒப்பந்தமானால் அதை நானே அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.