மீண்டும் ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி..!


மீண்டும் ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி..!

சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கியிருந்தார் ஷக்தி சௌந்தர ராஜன். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ‘மிருதன்’ படத்தை இயக்கினார்.

ஜெயம் ரவி, லட்சுமி மேனன், காளி வெங்கட், பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் அண்மையில் வெளியானது. தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிதான இந்த ஷாம்பி கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இமான் இசையில் உருவான பாடல்களும் படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தது.

தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைகிறது. ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை திருடன் போலீஸ் படத்தை தயாரித்த கென்ன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரிக்கிறார்.