கமல்ஹாசன் படத்தில் ஜெயம் ரவி!


கமல்ஹாசன் படத்தில் ஜெயம் ரவி!

‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கைவசம் மூன்று படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. நயன்தாராவுடன் ‘தனி ஒருவன்’, த்ரிஷாவுடன் ‘பூலோகம்’ மற்றும் த்ரிஷா-அஞ்சலியுடன் ‘அப்பாடக்கர்’ ஆகிய படங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதில் ‘தனிஒருவன்’ படத்தின் இசை, ட்ரைலர் இந்த ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. ‘பூலோகம்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் நெருக்கடியில் இருப்பதால் படம் தாமதமாகும் எனத் தெரியவந்துள்ளது.

இதனிடையில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘அப்பாடக்கர்’. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தலைப்பை ‘சகலகலா வல்லவன்’ என மாற்றியுள்ளனர். விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடவுள்ளனர்.

எக்ஸ்ட்ரா டிப்ஸ் : கடந்த 1982ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த படம் ‘சகலகலா வல்லவன்’. கமல், அம்பிகா உள்ளிட்டோர் நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தில் இடம் பெற்ற HAPPY NEW YEAR பாடல் இல்லாமல் எந்த புத்தாண்டு கொண்டாட்டமும் தமிழ்நாட்டில் ஆரம்பமாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.