25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..!


25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..!

ஜெயம் ரவி நடிக்க வந்து 12 ஆண்டுகளை கடந்துவிட்டார். இவர் தற்போது நடித்து வரும் ‘போகன்’ திரைப்படம் இவரது 20வது படமாகும்.

இப்படத்தை பிரபுதேவா தயாரிக்க லஷ்மன் இயக்கி வருகிறார். ஹன்சிகா, அர்விந்த் சாமி உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயம் ரவியின் 25வது படமாக தனி ஒருவன் பாகம் 2 இருக்கும் என இவரது அண்ணன் மோகன் ராஜா தெரிவித்திருந்தார்.

எனவே தன் 25வது படத்தை மனதில் வைத்து, நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஜெயம் ரவி.

அதன்படி அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்….

  • 21வது படத்தை விஜய் இயக்கவிருக்கிறார்.
  • 22வது படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கவிருக்கிறார்.
  •  23வது படத்தை சுசீந்திரன் இயக்கவிருக்கிறார்.
  • 24வது படத்தை கௌதம் மேனன் இயக்கவிருக்கிறார்.

இதன்படி 25வது படமாக தனி ஒருவன் 2 அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.