பாக்ஸ் ஆபிஸில் ‘தனி ஒருவனாய்’ ஜெயம் ரவி!


பாக்ஸ் ஆபிஸில் ‘தனி ஒருவனாய்’ ஜெயம் ரவி!

சமீபத்தில் வெளியான படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மனநிறைவைத் தந்த படம் ‘தனி ஒருவன்’. எத்தனையோ படங்கள் வெளியானாலும் அது சரியில்லை, இது சரியில்லை என சொல்லும் சிலர் இப்படத்தை பற்றி இதுவரை எதுவும் வாய்திறக்கவில்லை என்பதே இப்படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று.

சமீபத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. மோகன் ராஜா இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதி இசையமைத்திருந்தார்.

இப்படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ரூ 13 கோடி வரையிலும் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் ரூ 3 கோடி அளவிலும், வெளிநாடுகளில் ரூ 4 கோடி என மொத்தம் ரூ 20 கோடி வசூல் வேட்டை செய்துள்ளது. இதுவரை வெளியான ஜெயம் ரவி படங்களியேலேயே இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளதாம். இதனால் டபுள் ஹாட்ரிக் அடித்த சநதோஷத்தில் இருக்கிறார்களாம் இந்த ஜெயம் சதோதரர்கள்.