‘ஜெயம்’ ரவியின் ‘தனி ஒருவன்’ படத்துக்கு யு சான்றிதழ்


‘ஜெயம்’ ரவியின் ‘தனி ஒருவன்’ படத்துக்கு யு சான்றிதழ்

‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்)’ படங்களை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. இதில் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. இவர்களுடன் நாசர், வம்சி கிருஷ்ணன், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், சஞ்சனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வசனங்களை இயக்குனர் ராஜா, சுபா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிடவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருந்தனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ‘தனி ஒருவன்’ குழுவினர்.