‘நயனுடன் நயன் இயர்ஸ்க்கு அப்புறம்…’ ஜில் ஜில் ஜீவா..!


‘நயனுடன் நயன் இயர்ஸ்க்கு அப்புறம்…’ ஜில் ஜில் ஜீவா..!

மீண்டும் ஜீவா, நயன்தாரா ஜோடியாக இணைந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. ஸ்ரீ என்று பெயரை மாற்றியுள்ள ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை தொடர்ந்து ராம்நாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது பேமிலி சென்டிமெண்ட் கதை. கும்பக்கோணத்தில் நடக்கிற கதை.

நான் இடையில் லோக்கலாக படம் செய்யவில்லை. ஆனால் இப்படம் மூலம் அதை நிறைவேறியுள்ளது.

இப்படம் முடிவான உடனே நயன்தாரா தான் நாயகி என முடிவு செய்து விட்டோம். நயன்தாரவுடன் ஈ படத்தில் நடித்திருக்கிறேன்.

அதன் பிறகு இப்படத்தில் நயன் இயர்ஸ் (9 வருடங்கள்) கழித்து நடித்து இருக்கிறேன். அன்று பார்த்த முதல் இன்றும் அப்படியே இருக்கிறார்.

இடையில் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. எனவே வேறு ஹீரோயின்களுக்கு முயற்சி செய்தோம். ஆனால் நயன்தாரா இந்த கேரக்டருக்கு சரியான ஆள் என்பதால் அவரை மீண்டும் முயற்சி செய்து பிடித்தோம்.

இவ்வாறு ஜீவா பேசினார்.