தமிழில் அறிமுகமாகும் ஜெட் லீ…. ரஜினியுடன் இணைகிறார்..!


தமிழில் அறிமுகமாகும் ஜெட் லீ…. ரஜினியுடன் இணைகிறார்..!

பல வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘கபாலி’ படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துவிட்டு ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த கேரக்டரில் தற்போது ஜான் விஜய் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மற்றொரு வில்லனும் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் கதைப்படி ரஜினி மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு வில்லனால் சில பிரச்சினைகளை சந்திக்கிறாராம். அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க ஜெட் லீ, டோனி லீ, சைமன் யாம், ஜியாங் வென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதில் ஜெட் லீ அவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரின் சம்மதம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்கிறாராம் கபாலி.

அர்னால்ட் கால்ஷீட் கிடைக்கல… ஜெட் லீயாவது கொடுப்பாரா பார்க்கலாம்..