கமலின் உதவி இயக்குனருடன் இணைந்த ஜீவா-அட்லி..!


கமலின் உதவி இயக்குனருடன் இணைந்த ஜீவா-அட்லி..!

கடந்த வாரம் ஜீவா நடிப்பில் கொட்டாவி ராஜா… ஓ… மன்னிக்கவும் ‘போக்கிரி ராஜா’ வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் ‘திருநாள்’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதனையடுத்து கமலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹரி இயக்கிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ (Sangili Bungili Kathava Thorae) என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் ஜீவா.

‘காஞ்சனா’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிதான் இதன் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜீவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்து வருகின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ‘A for Apple’ என்ற தன் சொந்த நிறுவனம் மூலமாக அட்லி தயாரித்து வருகிறார். இப்படத் தயாரிப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் கைகோர்த்துள்ளது.