சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியை கைப்பற்றிய ஜீவா..!


சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியை கைப்பற்றிய ஜீவா..!

குழந்தை நட்சத்திரமாகவும் நாயகியாகவும் தெலுங்கில் வலம் வந்த ஸ்ரீதிவ்யா, தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் இவர் ஜோடி சேர்ந்த ராசி காக்கி சட்டை படத்திலும் இவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஸ்ரீதிவ்யா நடித்தாலும் சிவாவுடன் இவர் இணைந்து கொடுத்த வெற்றியே இவரை பட்டி தொட்டியெங்கும் பாப்புலராக்கியது.

தற்போது இவர் ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதில் ராதிகா, கோவை சரளா, தம்பி ராமையா, சூரி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

‘A for Apple’ என்ற நிறுவனம் சார்பாக அட்லி தயாரிக்க. கமலின் உதவியாளர் ஐ.கே.ஈ என்பவர் இயக்குகிறார்.