விஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா!


விஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா!

சமீபகாலமாக ஆர்யா நடித்த படங்கள் வெற்றிப் பெறவில்லை. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் கற்றுக் கொடுத்த பாடங்களில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறார் ஆர்யா.

தற்போது பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் பாபி, ராணா, ஸ்ரீதிவ்யாவுடன் நடித்து வருகிறார் ஆர்யா. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இதன் பின்னர் வேறு எதுவும் கைவசம் இல்லாத நிலையில் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

நடிகர் ஜீவாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கும் இப்படம் பிப்ரவரியில் தொடங்கப்படும்.

விஜய், மோகன்லால் நடித்த ‘ஜில்லா’ படத்தை சமீபத்தில் தயாரித்து அப்படத்தில் ஜீவா ஒரு பாடலுக்கு ஆடியது தங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே, இப்படத்திலும் ஆர்யாவுக்காக ஓர் ஆட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.