‘ரமேஷின் ‘ஜித்தன் 2’ பேய் படமல்ல… அதுக்கும் மேல…’ இயக்குனர் தகவல்.!


‘ரமேஷின் ‘ஜித்தன் 2’ பேய் படமல்ல… அதுக்கும் மேல…’ இயக்குனர் தகவல்.!

ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான “அ முதல் ஃதானடா, இவ எவர்சில்வர் தட்டு தானடா!” என்ற ஜித்தன் படப்பாடலை பாடாதவர்கள் இருக்கமுடியாது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.

புதுமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுதியுள்ளார். இதில் ரமேஷ் உடன் மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது…

“என் வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த படம் ‘ஜித்தன்’. அதில் இடம் பெற்ற ‘அ முதல் ஃதானடா’, பாடல் ஒலிக்காத கச்சேரி இன்று வரை கிடையாது. அதைவிட 10 மடங்கு அளவில் ஒரு குத்து பாடலை ஜித்தன் 2 படத்திற்காக இசையமைத்துள்ளேன்.

மேலும் இப்படத்தின் பின்னணி இசைக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சவுண்ட் ட்ராக்ஸை பயன்படுத்தியுள்ளேன்” என்றார்.

விழாவில் வின்சென்ட் செல்வா பேசியதாவது..

“முதல் பாகத்தில் இறந்துப்போன ரமேஷ் இரண்டாம் பாகத்தில் மீண்டும் பிறக்கிறார். அதன்பின்னர் ஒரு பேயுடன் மாட்டிக்கொண்டு வாழும் தருணங்களே ஜித்தன் 2.” என்றார்.

அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா பேசியதாவது… “பேய் என்றால் பயம் மட்டும்தான் இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஜித்தன் 2வில் அதற்கும் மேல பல விஷயங்கள் உள்ளன. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.