ராகவா லாரன்ஸின் ‘நாகா’ படத்தில் ஜோதிகா!


ராகவா லாரன்ஸின் ‘நாகா’ படத்தில் ஜோதிகா!

‘வாலி’ படத்தில் அறிமுகமாகி வாலிப நெஞ்சங்களை வசியம் செய்தவர் ஜோதிகா. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ‘காக்க காக்க’ படத்தில் நடித்தபோது நடிகர் சூர்யாவுடன் காதல் கொண்டு திருமணம் செய்து செட்டிலானார். அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

கடந்த 8 வருடங்களாக படங்களில் நடிக்காத ஜோதிகா அண்மையில் வெளியான ‘36 வயதினிலே’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெண்மையை போற்றும் விதமாக அமைந்ததால் மாபெரும் வெற்றிப்பெற்றது. எனவே ஜோதிகாவுக்கு நடிக்கும் ஆசை மீண்டும் வந்துள்ளதாம்.

இதனையறிந்த ராகவா லாரன்ஸ், தான் இயக்கும் ‘நாகா’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் ஜோதிகாவை நடிக்க கேட்டுள்ளதாக தெரிகிறது. அவரும் சம்மதித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்காக ஜோதிகாவுக்கு பெரிய தொகை ஒன்றை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.