ஏழை வியாபாரி குடும்பத்தை மகிழ்வித்த தனுஷ்!


ஏழை வியாபாரி குடும்பத்தை மகிழ்வித்த தனுஷ்!

தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். கோலிவுட்டை கலக்கிய இவர் பாலிவுட்டையும் கலக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டுக்கும் செல்லவிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘விஐபி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், கருணாகரன் ஆகியோருடன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் தயாரித்து விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகிறார். இதனிடையே ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடி வருகிறார்.

இவ்வாறாக படுபிஸியாக இருந்தபோதிலும் நற்பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழை வியாபாரி ஒருவரின் குழந்தை உடல் நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வருவது பற்றி அறிந்துள்ளார். எனவே அந்த வியாபாரியை தொடர்பு கொண்ட தனுஷ் அவருக்கு ரூ 5 லட்சம் கொடுத்து அந்த குழந்தையின் மருத்துவச் செலவை ஏற்றுள்ளார். தற்போது அந்த குழந்தை குணமாகி நலமுடன் உள்ளது.