‘எனக்கும் விஜய்க்கும் ஜஸ்ட் அரைமணி நேரம்தான்’ – ரோபா சங்கர்


‘எனக்கும் விஜய்க்கும் ஜஸ்ட் அரைமணி நேரம்தான்’ – ரோபா சங்கர்

நகைச்சுவை நாயகராகவும் நடன கலைஞராகவும் சின்ன திரையில் ஜொலிப்பவர் ரோபா சங்கர். தன்னுடைய மிமிக்ரியால் சின்னத் திரையில் இருந்து தற்போது பெரிய திரையிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் தனுஷின் ‘மாரி’ படத்தில் ரோபா சங்கரின் நடிப்பும் டைமிங் காமெடியும் பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது விஜய்யுடன் ‘புலி’, நயன்தாராவுடன் ‘மாயா’, ஜி.வி. பிரகாஷுடன் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்த தன் அனுபவம் குறித்து ரோபா சங்கர் கூறியதாவது…

“தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இதில் தனுஷ், விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதது. ‘புலி’ படத்தில் நடிக்கும்போது சிம்புதேவன் உங்கள் ஸ்டைலில் உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள் என சுதந்திரம் அளித்தார். இதில் என் காமெடி திருக்குறள் போன்று ‘நச்’சுன்னு ஷாட்டாக இருக்கும். படம் தொடங்கி அரைமணி நேரம் பின்னர்தான் நான் தோன்றுவேன். அதன்பின்னர் படம் முழுக்க விஜய்யுடன் வருகிறேன். இதில் என்னுடைய கேரக்டர் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது” என்றார்.