‘ராஜா மந்திரி’ இசையமைப்பாளருக்கு இன்ப அதிர்ச்சியளித்த இளையராஜா..!


‘ராஜா மந்திரி’ இசையமைப்பாளருக்கு இன்ப அதிர்ச்சியளித்த இளையராஜா..!

ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கும் இசையமைத்தார்.

தற்போது இவரது இசையில் அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து மற்றும் கலையரசன், காளி வெங்கட் நடித்துள்ள ராஜா மந்திரி ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

இதில் ராஜா மந்திரி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பம்பரம் என்ற பாடல் இவருக்கு ரொம்பவே ஸ்பெஷலாம்.

இந்தப் பாடலின் ரெக்கார்ட்டிங்கின் போது திடீரென அங்கு இளையராஜா வந்திருந்தாராம். இதனால் இப்பாடலை பாடிய சின்னப் பொண்ணு மற்றும் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் இருந்துள்ளனர்.

இதனை இப்போதும் நெகிழ்ச்சியாக கூறிவருகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.