செக்ஸ் கல்வியை வலியுறுத்திய இயக்குனர் படத்தில் ஜோதிகா..!


செக்ஸ் கல்வியை வலியுறுத்திய இயக்குனர் படத்தில் ஜோதிகா..!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். ஆனால் கடந்தாண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

பின்னர் பல கதைகளை கேட்டு வந்தாலும் எந்தப்படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். ஆனால் இப்போது தேசிய விருதை பெற்ற ‘குற்றம் கடிதல்’ பட இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தனது ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஆசிரியர் மாணவர் நடவடிக்கைகள், மாணவர்களை எப்படி கண்டிப்பது, செக்ஸ் கல்வி ஆகியவற்றை பற்றி இயக்குனர் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலச இருக்கிறாராம் பிரம்மா.