காக்கா முட்டையுடன் இணைந்த ப்ரேமம்… செம காம்பிநேசன் இல்ல…?


காக்கா முட்டையுடன் இணைந்த ப்ரேமம்… செம காம்பிநேசன் இல்ல…?

பிரேமம் நாயகன் நிவின் பாலி, நேரிடையாக இரண்டு தமிழ் படங்களில் நடிக்கவிருக்கிறார்.

ஒன்றில் யூ டேர்ன் (U TURN) புகழ் ஷரதா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இது சூப்பர் ஹிட் கன்னட படமான ‘Ulidavaru Kandanthey’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கௌதம் ராமச்சந்திரன் இயக்குகிறார்.

இதனையடுத்து, தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் நிவின்.

இதில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக இணைகிறார்.

பிரபல மலையாள இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.