பாலிவுட் செல்லும் காக்கா முட்டை நாயகி ஐஸ்வர்யா..!


பாலிவுட் செல்லும் காக்கா முட்டை நாயகி ஐஸ்வர்யா..!

உயர்திரு 420 மற்றும் சட்டப்படி குற்றம் ஆகிய படங்களில் நடித்தாலும், அட்டக்கத்தி படத்தில் அமுதா கேரக்டரால் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்த இவர் மற்ற நாயகிகள் செய்யத் தயங்கிய கேரக்டரை காக்கா முட்டை படத்தில் தேர்ந்தெடுத்து நடித்தார்.

தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்த இப்படம் மூலம் இந்தியளவில் அறியப்பட்டார். இந்நிலையில் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்கிறாராம்.

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா.

இவர் நடிப்பில் வளர்ந்துள்ள ஹலோ.. நான் பேய் பேசுறேன் படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.