கெட்ட வார்த்தை பேசி யூனிட்டை கலங்கடித்த காளிவெங்கட்..!


கெட்ட வார்த்தை பேசி யூனிட்டை கலங்கடித்த காளிவெங்கட்..!

தெகிடி, மதயானைக்கூட்டம், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காளி வெங்கட்.

அண்மையில் வெளியான மாதவனின் இறுதிச்சுற்று படத்தில் நாயகி ரித்திகா சிங்கின் வயதான தந்தையாக நடித்திருந்தார்.

இப்படம் இந்தி மற்றும் தமிழில் வெளியானது. இந்தியிலும் தந்தை கேரக்டரில் இவரே நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பில் இவர் கெட்ட வார்த்தை பேசி நடித்தாராம்.

இதுகுறித்து நடிகர் காளி வெங்கட் அவர்களே கூறியதாவது…

நீங்கள் இளமையாக இருப்பதால் தந்தை கேரக்டரில் நடிக்க முடியுமா? என்று என்னிடம் டைரக்டர் சுதா கேட்டார்.

எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறி ஒப்பந்தமானேன்.எனவே ஒரு குடிகாரனாக, பொறுப்பில்லாத தந்தையாக நடித்தேன்.

எனக்கு இந்தி தெரியாது என்பதால், இந்தி வசனங்களை தமிழில் எழுதி வைத்து பேசுவேன். ஒருமுறை ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்து விட்டேன். அதைக்கேட்ட ஒட்டுமொத்த யூனிட்டும் சிரித்து விட்டது.

ஒன்றும் புரியாமல் நான் மாதவன் சாரைப் பார்த்தேன். யோவ் நீ இப்போ பேசினது கெட்ட வார்த்தைய்யா என்றார். பதறிட்டேன்.

மொழி புரியாமல் முழிபிதுங்கி பலசமயம் யூனிட்டை கலகலக்க வைத்துள்ளேன்.

அப்புறம் மாதவன் சாரிடம் முன்னாடியே கேட்டு வைத்துக்கொண்டு சரியாக சொல்லி நடித்துவிட்டேன்” என்றார்.