விக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் ‘கபாலி’ நாயகி..!


விக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் ‘கபாலி’ நாயகி..!

ஆனந்த் சங்கர் இயக்கும் இரு முகன் படத்தில் இரு நாயகிளுடன் டூயட் பாடி வருகிறார் விக்ரம்.

நயன்தாரா மற்றும் நித்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடிக்க, நாசர், தம்பி ராமையா, யூகி சேது உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். புலி படத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மெட்ராஸ், கபாலி படப்புகழ் ரித்விகா விக்ரமுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அப்படம் தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

இவரது கேரக்டர் படத்தில் பெரிய திருப்புமுனையை தரும் என்கிறார்கள் படக்குழுவினர்.