ரஜினி ரசிகர்களுக்காக தாணு எடுத்த ‘மகிழ்ச்சி’யான முடிவு..!


ரஜினி ரசிகர்களுக்காக தாணு  எடுத்த ‘மகிழ்ச்சி’யான முடிவு..!

கபாலிடா… இன்றைய சினிமா ரசிகர்களின் தாரக மந்திரமாக இது பரவி வருகிறது. இதை வைத்து பல மீம்ஸ்கள் நெட்டில் உலா வருகிறது.

இப்படத்தின் டீசர் வெளியானது முதல் படத்தின் பாடல்கள் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இதன் பாடல்களை ஜீன் 10ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

இவ்விழாவை மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்த தாணு திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதன்படி திரளான ரஜினி ரசிகர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒய்.எம்சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்கான ஆலோசனையில் தாணு ஈடுப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.